இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக 188 அரசு ஊழியர்கள் கைது…!

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 188 அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் மொத்தம் நான்கு பேர் ஆபத்தான மருந்துகள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1985 இன் பிரிவு 3(1) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளில் மொத்தம் 213 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையான போதைப் பொருள்கள் மற்றும் கெத்தும் இலைகள் மற்றும் நீரைக் கைப்பற்றியதோடு, பல்வேறு போதைப்பொருள் மற்றும் விஷக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட 62,132 நபர்களில் 188 அரசு ஊழியர்களும் அடங்குவர் என அது மேலும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here