இரவு வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – மலேசிய வானிலை ஆய்வு மையம்

தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளிலும், சபா மற்றும் சரவாக் பகுதிகளிலும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும், அதைத் தொடர்ந்து சபா மற்றும் லாபுவானின் உட்பகுதிகளில் காலையில் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“பிற்பகலில் பெர்லிஸ் மற்றும் கெடாவின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பினாங்கு, கிளாந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

மேலும் “சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், சபா மற்றும் மேற்குக் கடற்கரை, தாவாவ், சண்டாக்கான் மற்றும் கூடாட் மற்றும் சரவாக் உள்ளிட்ட பகுதிகளிலும், இவை தவிர கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு, முக்கா, காபிட், பிந்துலு, மிரி மற்றும் லிம்பாங் ஆகியவற்றின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“மாலையில், கிளாந்தான், திரெங்கானு, பகாங்கின் உட்பகுதிகள் மற்றும் தாவாவ் மற்றும் சண்டாக்கான், சபா ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர், பகாங் மற்றும் சபாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் காலையில் பல இடங்களில் மழை பெய்யும் என்றும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

“பிற்பகலில் பேராக்கின் பல இடங்களில் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here