பெக்கான் அருகே காட்டுத் தீ, கிட்டத்தட்ட 30 ஹெக்டேர் எரிந்து நாசம்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சனிக்கிழமை (மே 13) லாடாங் KMT ஜாலான் பெக்கான்-நெனாசி, பெக்கான் அருகே உள்ள சுமார் 30 ஹெக்டேர் வனப்பகுதி தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து திணைக்களம் காலை 7.55 மணியளவில் எச்சரித்ததாகவும், பெக்கான், பெராமு, நெனாசி மற்றும் கேபெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து 26 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குத் திரட்டப்பட்டனர் என்று, பகாங் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் வான் முகமட் ஜைடி வான் இசா கூறினார்.

“தீ ஏற்பட்ட இடம் ஒரு கரி நிலப் பகுதி, எனவே வானிலை மிகவும் சூடாக இருப்பதால் அப்பற்றைப் பகுதி எளிதில் தீப்பிடிக்க காரணமாகிறது” என்று அவர் கூறினார்.

தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதியில் உள்ள 11 பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் தீ ஏற்பட்ட இடத்தை கண்காணிக்க ட்ரோன்களை பறக்கவிட்டனர்.

இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here