சிப்பாங்கின் பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள ஒரு பள்ளியில், ஒன்பது வயது மாணவர் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் விசாரணைக்கு உதவும் வகையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 26) கைது செய்யப்பட்ட புகைப்படக் கலைஞர், ஜூன் 1 வரை ஒரு வாரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
மே 15 அன்று பள்ளியில் இருந்து திரும்பும் போது, குறித்த மாணவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக, பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை மே 26 அன்று அளித்த புகாரின் பேரில், 39 வயதான உள்ளூர் நபர் சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையக வளாகத்தில் வைத்து மதியம் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக, சிப்பாங் மாவட்ட துணை போலீஸ் தலைவர், நூர் அஹ்வான் முகமட் தெரிவித்தார்.
மே 15 அன்று அறிவியல் குழு மாதத்துடன் இணைந்து நடத்தப்பட்ட செல்லப்பிராணி பூங்கா நிகழ்ச்சியின் போது பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின் சந்தேக நபர், குறித்த நிகழ்வில் புகைப்படம் எடுக்க பள்ளியால் பணியமர்த்தப்பட்ட இரண்டு புகைப்படக் கலைஞர்களில் ஒருவர் என்று முகமட் நூர் ஏஹ்வான் கூறினார்.
குறித்த சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் ஏதுமில்லை என்றும், மற்ற மாணவர்களும் சாட்சிகளும் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்பட்டதாகவும், விசாரணை தொடர்வதாகவும் அவர் மேலும் கூறினார்.