ஜாலான் சிபு-பிந்துலு சாலையின் 64 ஆவது கிலோமீட்டரில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் இரண்டு வயது சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை 10.09 மணியளவில் நடந்த விபத்தில் இரண்டு வயது சிறுவன் அலெசாண்ட்ரோ கொலின் ஸ்டீவர்ட் எனவும், ஏனையோர் மார்கோஸ் மரிக்கன், 26, மரிக்கன்@லங்கான் லெகி, 61, மற்றும் அலிசேஷா பாத்ரிஷ் லாங்கி, 24 என அடையாளம் காணப்பட்டனர்.
அத்தோடு “பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை,” என்று செலாங்காவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், சுக்ரி அப்துல் ரஹீம் கூறினார்.
இவ் விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர், இதில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி செலாங்காவ் ஹெல்த் கிளினிக்கிற்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார்.