அன்னுார் மூசா இப்போது பாஸ் உறுப்பினர் என்கிறார் தக்கியுடின்

பெர்துபுஹான் முஃபகாத் நேஷனல் (MN) தலைவரும், முன்னாள் அம்னோ பிரமுகருமான டான்ஸ்ரீ அன்னுார் மூசா, பாஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

நேற்று அவருடன் சேர்த்து கட்சியில் இணைந்த 3,000 புதிய உறுப்பினர்களை பாஸ் ஏற்றுக்கொண்டதாக தக்கியுடின் கூறினார்.

நெகிரி செம்பிலானில் நடைபெற்ற பாஸ் கட்சி பேரணியில் பேசிய அவர், “பாஸ், பெர்சாத்துவில் உறுப்பினர்களாக ஆவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர்…(இதற்குப் பிறகு) பாஸ் கட்சியில் இணைந்த பிற சமூகத் தலைவர்களின் பெயர்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here