செல்லப்பிராணி விற்பனை செய்யும் கடைகளில் பூனைகள் மற்றும் நாய்கள் விற்பனை செய்வதை நிறுத்த சிலாங்கூர் திட்டமிட்டுள்ளதாக மாநில செயற்குழு உறுப்பினர் Ng Sze Han நேற்று தெரிவித்தார்.
மாநிலத்தில் தெருநாய்களை நிர்வகித்தல் குறித்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு சிலாங்கூர் தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், இது செல்லப்பிராணிகளை புதிதாக வாங்குவதை விட ஆதரவற்று இருக்கும் செல்லப்பிராணிகளை தத்தெடுக்க மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இதன்முலம் செல்லப்பிராணிகளைக் கைவிடும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் Ng மேற்கோள் காட்டினார்.
செல்லப்பிராணிகளை இனி செல்லப்பிராணி கடைகளில் விற்க முடியாது என்றாலும், கடைகளில் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளை விற்க அனுமதிக்கப்படும், என்றார்.










