நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் மோதி, கீழே விழுந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

கோலாலம்பூரின் கம்போங் டத்தோ கெராமாட் வழியாக அமைந்துள்ள நெடுஞ்சாலையில், தடுப்பு சுவரில் மோதி, கீழே விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று (ஜூன் 14) பிற்பகல் 3.50 மணியளவில் சுங்கை பேசி – உலு கெலாங் விரைவுச் சாலையில் (SUKE) இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.

வேக கட்டுப்பாட்டினை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமரா காட்சிகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முகமட் ரேசா அப்துல் ரஷீத் (43) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர், நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலாக இருந்தவேளை, எதிர்திசையில் தன்னை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க முயன்றார், ஆனால் நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் மோதி, கீழே விழுந்ததில் இந்த கொடுமையான மரணம் ஏற்பட்டது என அறிய முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here