தமது கடைகளை வெளிநாட்டினர் உட்பட மூன்றாம் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கும் வணிகர்கள் மற்றும் வியாபாரிகளின் உரிமங்களை கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) ரத்து செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெளிவுபடுத்தினார்.
உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளின் நலனுக்காக விதிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவது எப்படி என்பது தொடர்பில், அரசாங்கமும் DBKL நிறுவனமும் இப்போது ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
“விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் (உள்ளூர் மக்களுக்கு மட்டும்) உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான, ஒரு சிறந்த நெறிமுறைகளை கையாளுவது குறித்து நான் DBKL மேயர் மற்றும் அதன் இயக்குநர்களுடன் சேர்ந்து கலந்தாலோசித்து வருகிறேன்” என்று, இன்று ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள புசாட் பென்ஜாஜா மடானியில் பிரதமருடனான சந்திப்பு மற்றும் வாழ்த்து அமர்வுக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிகழ்வில் கோலாலம்பூர் மேயர் டத்தோ கமாருல்ஜாமான் மாட் சாலேயும் கலந்து கொண்டார்.
இதற்கிடையில், உள்ளூர் அதிகாரிகள், குறிப்பாக நகர்ப்புறங்களில், நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு வசதியான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும், இதனால் அவர்கள் சாதகமான சூழலில் வணிகத்தை நடத்த முடியும் என்று முன்னர் கூறியிருந்தார்.
நடைபாதை வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பதால் முறையான வசதிகள் செய்துகொடுப்பது முக்கியம் என்றார்.















