தனது 11 விழுக்காடு ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா? Grab நிறுவனம்..!!

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி ரைட்-ஹெய்லிங் மற்றும் உணவு விநியோக செயலியான சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Grab ஹோல்டிங்ஸ், தனது தொழிலாளர்களில் 1,000 க்கும் அதிகமான அல்லது 11 விழுக்காடு பணியாளர்களை குறைப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அந்தோனி தான் கடந்த செவ்வாயன்று (ஜூன் 20) தெரிவித்தார்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட விலை உயர்வு போன்றவற்றால் மூலதனத்தின் விலை உயர்ந்துள்ளது, போட்டி அனைத்து துறைகளையும் நேரடியாக பாதிக்கிறது,” என்று தான் கூறினார்.

எனவே Grab நிறுவனம் தன்னுடைய இழப்பினை ஈடுசெய்யும் வகையில் குறித்த பணிநீக்கங்களை செய்யவுள்ளது என்றும், ஆனாலும் இது முழுதும் இலாப நோக்கத்திற்காக செய்யப்படவில்லை என்றும், இந்த ஆண்டுக்குள் இவற்றை சரிசெய்து இலக்கை அடைய வேண்டும் என்றும் தான் கூறினார்.

2012 இல் நிறுவப்பட்ட Grab நிறுவனத்தின் “superapp”, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உட்பட எட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டெலிவரிகள், சவாரிகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here