வரவிருக்கும் ஹரி ராயா ஐடிலதா கொண்டாட்டத்திற்கு இறைச்சி உட்பட போதுமான உணவு இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
குறித்த காலக்கட்டத்தில் உணவு வழங்கல் போதுமானதாக இருப்பதை உறுதிச்செய்ய அவ்வப்போது கண்காணிக்கும் என்று, அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.
அத்தோடு திடீரென பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டால், மத்திய வேளாண்மை சந்தைப்படுத்தல் ஆணையம் (FAMA) மற்றும் தேசிய விவசாயிகள் அமைப்பு (PPK) மூலம் அமைச்சகம் தலையிடும் என்றார்.
கடந்த ரமலானின் போது FAMA மற்றும் PPK பொருட்கள் விலையேற்றத்தில் தலையிட்டது போல் தலையிடும். அல்ஹம்துலில்லாஹ், இறைச்சியின் விலையை நாங்கள் கட்டுப்படுத்த முடிந்தது, ”என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக மத்திய வேளாண்மை சந்தைப்படுத்தல் ஆணையம் நாடு முழுவதும் அதிக கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக முகமட் சாபு மேலும் கூறினார்.