இன்று பிற்பகல் 2 மணி வரை நாட்டின் நான்கு மாநிலங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (Met Malaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கெடா, பினாங்கு, பேராக் மற்றும் சிலாங்கூரில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என அது தெரிவித்துள்ளது.
“கெடா மாநிலத்தில் (லங்காவி, யான் மற்றும் கோலா மூடா) இடியுடன் கூடிய மழை, பலத்த மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது; பினாங்கு; பேராக் (கேரியான், லாரூட், மாடாங் டான் செலமா, மஞ்சோங், பாகன் டத்தோ மற்றும் ஹிலிர் பேராக்), சிலாங்கூர் (சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான்),” என்று ஆகிய இடங்கள் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் அது தெரிவித்துள்ளது.
இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லக்கூடிய குறுகிய கால எச்சரிக்கை என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.









