நேற்று மாலை, பாசீர் பூத்தேயின் ஐந்து வெவ்வேறு பகுதிகளில் வீசிய கடுமையான புயலில் மரங்கள் விழுந்ததில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
பாசீர் பூத்தே மலேசிய குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி நிக் முகமட் நோர் நிக் மாட் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் கம்போங் புக்கிட் அபல், கம்போங் பெர்மாடாங் ரம்பை, கம்போங் சுங்கை துரியான், கம்போங் சுங்கை கிலோங் மற்றும் கம்போங் செலிசிங் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை, சேதமடைந்ததாகக் கூறப்படும் 10 வீடுகளின் மேல் விழுந்த மரங்களை நாங்கள் அகற்றியுள்ளோம். இன்னும் சில வீடுகள் இன்று பிற்பகல் விடுவிக்கப்படும், மேலும் இந்தப் பணி நாளை முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், கம்போங் பெர்மாடாங் ரம்பையில் உள்ள வீடுகள் மற்றும் வாகனம் மட்டுமே சேதம் அடைந்துள்ளதாகவும் நிக் முகமட் நோர் கூறினார்.















