அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு முறை உரையாற்றிய ஒரே இந்தியப் பிரதமர் மோடி..!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு தடவை உரையாற்றிய ஏனைய நாட்டுத் தலைவர்கள் என்ற அடிப்படையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையே அந்த பெருமை சாரும்.

அமெரிக்க நாடாளுமன்ற அமர்வின்போது, ஒரு மணி நேரம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பருவநிலை இலக்குகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பிற முக்கிய விஷயங்களில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, பல முக்கிய விஷயங்களை தனது உரையில் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் 5 முக்கிய சிறப்பம்சங்கள் என்று நோக்கினால்,

1. இந்தியப் பொருளாதாரம்

இது குறித்து பேசிய பிரதமர் மோடி: “நான் பிரதமராக முதன் முதக் அமெரிக்கா சென்றபோது, உலகின் 10வது பெரிய பொருளாதார மையமாக இந்தியா இருந்தது. ஆனால் இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதார மையமாக உள்ளது. இந்நிலையில் இந்தியா விரைவில் 3வது பெரிய பொருளாதார வலிமையான நாடாக மாறும். நாம் பெரிதாக வளர்வது மட்டுமல்லாமல் வேகமாகவும் வளர்ந்து வருகிறோம். இந்தியா வளரும்போது உலகம் முழுவதும் இணைந்தே வளரும் என்று அவர் கூறினார்.

2. பெண்கள் அதிகாரம்

“…இன்று நவீன இந்தியாவில், பெண்கள் நம்மை சிறந்த எதிர்காலத்திற்கு இட்டுச் செல்கிறார்கள். இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை பெண்களுக்கு நன்மை பயக்கும் வளர்ச்சி மட்டும் அல்ல. இது பெண்கள் தலைமையிலான வளர்ச்சியாகும், அங்கு பெண்கள் முன்னேற்றப் பயணத்தை வழிநடத்துகிறார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஒரு தாழ்மையான பழங்குடிப் பின்னணியில் இருந்து வந்த பெண் திரௌபதி முர்முவு எமது நாட்டின் குடியியல் தலைவராக இருப்பதே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.

3. காலநிலை நடவடிக்கைகள்

இது குறித்து பேசிய பிரதமர் மோடி: “…பாரிஸ் உறுதிமொழியை நிறைவேற்றிய ஒரே G20 நாடாக நாங்கள் இருக்கிறோம். 2030 ஆம் ஆண்டின் இலக்கை விட 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வளர்ச்சியின் 40% க்கும் மேலான அடைவுகளை நாங்கள் பெற்றுள்ளோம்.

4. வேற்றுமையில் ஒற்றுமை

“உலகில் உள்ள அனைத்து சமய நம்பிக்கைகளின் தாயகமாக இந்தியா உள்ளது, அவை அனைத்தையும் நாங்கள் கொண்டாடுகிறோம். இந்தியாவில், பன்முகத்தன்மை என்பது இயற்கையான வாழ்க்கை முறை, இன்று உலகம் இந்தியாவைப் பற்றி மேலும் மேலும் அறிய விரும்புகிறது என்று நரேந்திர மோடி கூறினார்.

“எங்களிடம் 2,500 அரசியல் கட்சிகள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 20 வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன. எங்களிடம் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கிளைமொழிகள் உள்ளன, இருப்பினும் நாங்கள் ஒரே நாட்டவர் என்ற ஒரே குரலில் பேசுகிறோம்.

5. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

குறித்து பிரதமர் மோடி: “‘வசுதேவ குடும்பகம்’ என்ற கொள்கையின்படி நாங்கள் வாழ்கிறோம்- அதாவது உலகம் ஒரே குடும்பம் என்ற கோட்பாடே அதன் கருத்தாகும். உலகத்துடனான நமது ஈடுபாடு அனைவரின் நலனுக்காகவே உள்ளது. அதே மனப்பான்மை நாம் தலைமை வகிக்கும் கருப்பொருளிலும் காணப்படுகிறது. G20 உச்சி மாநாடு, ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம். கடந்த வாரம், அமைதி காக்கும் படையினரை கௌரவிக்கும் வகையில் நினைவுத் தூபியைக் கட்டுவதற்கான ஐ.நா.வில் அனைத்து நாடுகளும் எங்களின் முன்மொழிவில் இணைந்தனர் என்பதைக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here