7.42 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 222 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

கடந்த வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி மேற்கொண்ட இரண்டு சோதனைகளில் RM7.42 மில்லியன் மதிப்பிலான 222 கிலோகிராம் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குறித்த இரண்டு நாட்கள் மேற்கொண்ட சோதனையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 38 முதல் 47 வயதுடைய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர், டத்தோஸ்ரீ முகமட் கமாருடின் முஹமட் டின் கூறுகையில், விசாரணையின் அடிப்படையில், மூன்று சந்தேக நபர்களும் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிப்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், 44 வயதுடைய ஒருவரை போலீசார் கைது செய்ததாகவும் அவர் கூறினார்.

இந்தச் சோதனையில் 47.8 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் மற்றும் கேட்டமைன் ஆகிய போதைப்பொருள்களை போலீசார் கைப்பற்றியதாகவும், அவற்றின் மதிப்பு 1.62 மில்லியன் மதிப்பிலானவை எனவும் அவர் கூறினார்.

அதன் பின்னர் “ஜூலை 6 ஆம் தேதி நடந்த ஒரு தனி நடவடிக்கையில், ஷா ஆலாமில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் பிற்பகல் 3.40 மணிக்கு போலீசார் சோதனை நடத்தினர், அதில் 38 மற்றும் 47 வயதுடைய இருவரை கைது செய்தனர்.

“குறித்த சோதனையின் விளைவாக, 174.2 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் மற்றும் யாபா மாத்திரைகள் RM5.8 மில்லியன் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் அளவு 222 கிலோகிராம்கள் என்றும் அவற்றின் மொத்த மதிப்பு 7.42 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது,” என்றும் அவர் இன்று, சிலாங்கூர் காவல் படைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அத்தோடு அவர்களிடமிருந்து கியா மற்றும் தோயோத்தா ஹிலக்ஸ் ஆகிய இரண்டு வாகனங்களையும், ரிங்கிட் 87,705 மதிப்புள்ள இரண்டு மோதிரங்கள் மற்றும் கைக்கடிகாரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

“சந்தேக நபர்கள் அனைவரும் ஏழு நாட்கள் தடுப்புக்ப்காவலில் வைக்கப்பட்டனர் என்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here