மலேசியாவில் முதலீடு செய்ய TESLA விருப்பம்; இயங்கலையில் எலான் மஸ்கை சந்தித்தார் பிரதமர்

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று SPACE X-இன் தோற்றுநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க்கை இயங்கலை வாயிலாக சந்திப்பு நடத்தினார்.

வேகமான மற்றும் பரந்த இணைய அணுகலுக்கு பங்களிக்கும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையில், SPACE X நிறுவனத்தின் பங்கேற்பு குறித்தும் அச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

TESLA INCஇன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் உடனான இந்தச் சந்திப்பில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ், தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் முதலீடு செய்வதற்கான TESLA வின் முடிவு தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறிய பிரதமர்,

நாட்டில் மின்வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான TESLA வின் விண்ணப்பத்தை மலேசியா இவ்வாண்டின் தொடக்கத்தில் ஏற்றுக்கொண்டது.

TESLA நிறுவனம் மலேசியாவில் அலுவலகம், காட்சிக்கூடங்கள், சேவை நிலையங்கள் ஆகியவற்றைத் திறந்து, அதன் கார்களுக்கென மின்னூட்டு நிலையக் கட்டமைப்பை அமைக்கும் என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சு கூறியிருந்தது.

இந்நிலையில், மலேசியாவில் TESLA வின் செயல்பாடுகள் இவ்வாண்டு தொடங்கும் என்று கூறிய பிரதமர், அதன் தலைமையக அலுவலகம் சிலாங்கூரில் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த முன்முயற்சி மக்களின் திறன் குறிப்பாக வருமான ஈட்டுவது உட்பட கல்வி, தொழில்நுட்ப விவசாயம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த முன்முயற்சி, குறிப்பாக கல்வி, விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் வருமானம் ஈட்டும் திறன் ஆகியவற்றை அதிகரித்து, மக்களின் நல்வாழ்வை அதிகரிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கிய இச்சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here