கார் – லோரி மோதல்; தந்தையும் மகனும் பலி

குவா மூசாங்,  ஜாலான் குவா மூசாங்-ஜெலியின் KM37 இல், ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அவரது மகனும் சென்ற காரும் மரக்கட்டை ஏற்றிச் சென்ற லோரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த முகமட் ஜூகி முகமது அலி  55, மற்றும் அவரது மகன் முஹம்மது ஹஸ்புல்லா 15, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது மற்றொரு மகன் முஹமட் ஹுசைஃபா 18, மார்பில் காயம் அடைந்ததாகவும் Gua Musang OCPD Supt Sik Choon Foo தெரிவித்தார்.

முகமட் ஜூகி மற்றும் அவரது மகன்கள் குவா மூசாங்கின் திசையில் ஜெலிக்கு பயணம் செய்ததாக ஆரம்ப விசாரணைகள் காட்டுகின்றன. வெள்ளிக்கிழமை (ஜூலை 21) அவர் ஒரு அறிக்கையில், அவர்களின் கார் ஒரு சிறிய வளைவில் எதிர் பாதையில் சென்றதாக நம்பப்படுகிறது. இதனால் எதிரே வந்த லோரி மீது  மோதியது என்று அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) அறிக்கையில் தெரிவித்தார்.

லோரி டிரைவர் காயமின்றி தப்பினார். இரண்டு உடல்களும் காயமடைந்த சிறுவனும் குவா மூசாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததற்காக இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here