வருமான வரித்துறையினர் கோலாலம்பூரில் அதிரடி சோதனை

எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பல பிரமுகர்களை கைது செய்திருப்பதோடு பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வழி அறியப்படுகிறது. எம்ஏசிசியின் நடவடிக்கையை தொடர்ந்து வருமான வரித்துறை தலைநகரில் பல இடங்களில் அதிரடி சோதனையை நடத்தி வருகிறது.

குறிப்பாக சில குறிப்பிட்ட வணிக வளாகங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதோடு சில கடைகளை சீல் வைத்திருப்பதாகவும் தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் அல்லது விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத வர்த்தகர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here