ஜார்ஜ் டவுன், அகஸ்ட்டு 7:
பினாங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய படகுச் சேவை இன்று முதல் தனது முழு செயல்பாட்டைத் தொடங்கியது.
இப்படக்குச் சேவை பங்கலான் ராஜா துன் உடா (PRTU) இலிருந்து பங்கலான் சுல்தான் அப்துல் ஹலீம் (PSAH) வரை என்று பினாங்கு காபந்து முதல்வர் சவ் கோன் இயோவ் தெரிவித்தார்.
படகு வருகைக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு வசதியாக இரு முனையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும், காத்திருப்புப் பகுதியில் ஏர் கண்டிஷனிங் அமைப்பு, பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான லிப்ட் வசதிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
“இதற்கு முன், பயணிகள் மத்தியில் பல பிரச்சினைகள் இருந்தது என்பதை நான் அறிவேன், ஆனால் இன்று முதல், ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண்போம்,” என்று அவர் இன்று PRTU இல் புதிய படகு சேவையை அறிமுகப்படுத்திய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த பயணிகள் படகு சேவையை இன்று முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை ஆத்துமாக்கள் இலவசமாக அனுபவிக்கலாம் என்றும், ஒவ்வொரு படகிலும் ஒரே நேரத்தில் 150 பயணிகள் மற்றும் 50 மோட்டார் சைக்கிள்கள் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.