வேலை மோசடியில் சிக்கிய இளம் பெண்ணுக்கு RM100,000க்கு மேல் இழப்பு

குவாந்தான், அகஸ்ட்டு 8:

ஆன்லைனில் அதிக ஊதியம் பெறும் பகுதி நேர வேலைகளை வழங்குவதாகக் கூறிய ஒரு மோசடி கும்பலிடம் மாட்டிய பெண் ஒருவர் RM118,767 ஐ இழந்தார்.

பாதிக்கப்பட்ட 22 வயதான பெண், தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணிடமிருந்து இன்ஸ்டாகிராம் மூலம் ஜூலை 23 அன்று குறித்த வேலை வாய்ப்பைப் பெற்றதாக, பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்ட இணைப்பில் உள்ள பொருட்களின் ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கும்படி கேட்கப்பட்டது, மேலும் எடுக்கப்பட்ட ஒவ்வொரு ஸ்கிரீன்ஷாட்டுக்கும் பணம் பெறுவதாகக் கூறினார்.

“இங்குள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கப்பட்டபெண், இரண்டு பணிகளை முடித்ததற்காக RM47 ஊதியம் பெற்றார், எனவே அடுத்த வேலையைப் பெற அவர் ஆர்வத்தில் சந்தேக நபரை தொடர்பு கொண்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் மேலதிக பணியைத் தொடர்வதற்கு முன், முதலில் பணம் செலுத்துமாறு பாதிக்கப்பட்டவருக்கு அறிவுறுத்தியதாக யாஹாயா கூறினார்.

உடனே அந்தப்பெண் சந்தேக நபரால் வழங்கப்பட்ட 11 கணக்குகளுக்கு 20 ஆன்லைன் பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளதாகவும், அதன் பின்னரே தான் ஏமாற்றப்படத்தை உணர்ந்ததாக வும் அவர் இன்று, குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் அந்தப் பெண் நேற்று புகார் அளித்ததாக யாஹாயா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here