ஈரானில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

ஈரான் நாட்டில் உள்ள ஷா செராக் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

ஈரானின் தெற்கு நகரமான சிராசில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, துப்பாக்கி ஏந்திய ஒருவர் ஷா செராக்கிள் நுழைய முயன்றதாகவும், அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதித்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here