வாங்சா மாஜூவில் பெண் பாலியல் பலாத்காரம்; ஐவருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர்:

வாங்சா மாஜூவில் உள்ள ஒரு வீட்டில், நேற்று, ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“சந்தேக நபர்கள் அனைவரையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை “என்று புக்கிட் அமான் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் புலனாய்வுப் பிரிவின் (டி11) முதன்மை துணை இயக்குநர், துணை ஆணையர் சித்தி கம்சியா ஹாசன் தெரிவித்தார்.

“முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவரின் மைத்துனர் மூலம் அறிமுகமானவர் மட்டுமே அவளை பாலியல் பலாத்காரம் செய்தார், அதே நேரத்தில் அதில் மைத்துனர் பங்கேற்கவில்லை,” என்று நம்பப்படுகிறது.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 27 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது, அவரது மைத்துனரின் நண்பர் என நம்பப்படும் சந்தேகநபர் கையால் அப்பெண்ணின் வாயை மூடிக்கொண்டிருந்ததாகவும், சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கைகளை கட்டி, அவளது வாயை டக்ட் டேப்பால் மூடி, பாலியல் பலாத்காரம் செய்து, அக்கொடூரமான செயலை படம் பிடித்தனர் என்றும் முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here