பாசீர் கூடாங், ஜாலான் நீலாம் 1, தாமான் செந்தனா அருகே ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) மாலை 5.16 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாக பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி முகமட் யுஸ்ரி அதான் தெரிவித்தார். தேடல் நடத்துவதற்காக நாங்கள் ஒன்பது பணியாளர்களை அந்த இடத்திற்கு அனுப்பினோம்.
முஹமட் டானில் ஜாஹ்ரி போர்ஹானுதீன் என அடையாளம் காணப்பட்ட பலியானவரின் உடல், ஆற்றங்கரையில் இருந்து 3 மீட்டர் ஆழத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது மற்றும் அவரது உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், ஶ்ரீ அலாம் காவல்துறைத்தலைவர் Mohd Sohaimi Ishak சம்பவம் குறித்த புகார் பெற்றதை உறுதிப்படுத்தினார்.