செய்தி: ஆர்.கிருஷ்ணன்
ஈப்போ, லிட்டல் இந்தியா வளாகத்தில் மலபார் நகைக்கடையின் 9 வது கிளை நிறுவனம் திறப்பு விழா கண்டது. ஏற்கெனவே, மலேசியாவில் மலபாரின் 8 நகைக் கடைகள் செயல்பட்டு வருவதாக மலபார் நகைக்கடையின் நிர்வாகத் தலைவர் பி. நிஜேஸ் கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு இந்த நகைக்கடை பேராக் மக்களுக்காக திறப்பு விழா செய்யப்பட்டது. அதோடு, இப்பண்டிகையை முன்னிட்டு நகைகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுவதோடு, வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


அதுமட்டுமின்றி, மலபார் நகைக்கடை நிறுவனம் பொது மக்களுக்கு உதவிகள் செய்து வருவது வழக்கமான ஒன் றாகும். குறிப்பாக, பண்டிகை காலங்களில் தீபாவளி, ஹரி ராயா போன்ற திருநாட்களில் வசதிக் குறைந்த குடும்பத் தினர் மற்றும் சிறார்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் செய்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும் பொருட்டு இந்த நகைக்கடை அனுதினமும் திறந்து வைத்திருக்கப் படும். இங்கு பல தரப்பட்ட புது பொலிவுடன் நவீன முறை யில் தயார் செய்யப்பட்ட நகைகள் விநியோகம் செய்யப் பட்டு வருவதாக அவர் சொன்னார்.
மலேசிய மக்களின் ஆதரவு மற்றும் அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் நாங்கள் சிறந்து விளங்குகிறோம். அவர்களின் வற்றாத ஆதரவினால் மேலும் அதி கமான கிளை நிறுவனங்களை இந்நாட்டில் திறப்பு விழா செய்யக்கூடும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
மலபார் நகைக்கடை நிறுவனம் அனைத்துலக ரீதியில் தங்கள் வணிகத்தை செயல் படுத்தி வருகின்றனர். தற்போது 200 க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் செயல் பட்டு வருகிறது. குறிப்பாக, ஆசியாவில் அரபு நாடுகளிலும் மற் றும் விரைவில் ஆஸ்தி ரேலியாவிலும் மலபார் நகைக்கடைகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.