மித்ராவுக்கு 100 மில்லியன் ரிங்கிட்; இந்தியர்கள் மீதான பிரதமரின் அக்கறை – டத்தோ ரமணன்

இரண்டாவது மடானி பட்ஜெட் குறித்த பிரதமரின் அறிவிப்பை மலேசிய இந்தியர் உரு மாற்றப் பிரிவின் (மித்ரா) சிறப்புப் பணிக்குழு  வரவேற்கிறது என்று டத்தோ ரமணன் கருத்துரைத்தார். இந்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு இந்தியர்கள் மீதான பிரதமரின் அக்கறையை காட்டுகிறது என்றும் அவர் கூறினார். இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களில் 393.8 பில்லியன் ரிங்கிட் மிக உயர்ந்த பட்ஜெட்டாகும். நாடு மற்றும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் ஒற்றுமை அரசாங்கத்தின் உறுதியை மடானி பட்ஜெட் நிரூபிக்கிறது.

மடானி பட்ஜெட்டில் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்காக மித்ராவிற்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக அரசாங்கம் தொழில்முனைவு மற்றும் கல்வி நிதிகளையும் (SJKT கட்டிடங்களின் பராமரிப்பு) வழங்கியுள்ளது.

B40 மற்றும் M40 குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பல்வேறு மூலோபாய முயற்சிகள் மூலம் மித்ரா நிதி ஒதுக்கீடு திறம்பட மற்றும் நேர்மையுடன் செலவிடப்படுவதை உறுதி செய்வேன். மித்ரா பட்ஜெட் 2024 நிதி ஒதுக்கீடு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதில் நான் ஒரு பெரிய பொறுப்பை ஏற்பேன் என்று டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here