பினாங்கு பாலத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவி மீனவர்களால் பாதுகாப்பாக மீட்பு

ஜார்ஜ்டவுன்:

நேற்று செவ்வாய்க்கிழமை (அக் 24) மாலை பினாங்கு பாலத்தில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் 15 வயது பள்ளி மாணவியை மீனவர்கள் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.

கடலில் இருந்த மீனவர்களால் குறித்த சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“இரவு 7.10 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, ஜார்ஜ் டவுன் நோக்கிச் செல்லும் பாலத்தின் KM3.4 இல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி பட்டர்வொர்த்தில் உள்ள மீனவர் படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here