செப்டம்பர் 30ஆம் தேதியோடு முடிவடைந்த இவ்வாண்டின் 3ஆம் காலாண்டில் Carlsberg Malaysia நிறுவனம் 513.4 மில்லியன் ரிங்கிட் வருவாயைப் பதிவு செய்துள்ளது. அதே சமயம் இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்நிறுவனம் 79.5 மில்லியன் ரிங்கிட் லாப ஈவை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே குறிப்பிட்ட காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வருமானத்தோடு ஒப்பிடும்போது இவ்வாண்டு வருமானம் 10.2 விழுக்காடு சரிவு கண்டுள்ளது.
அதேபோல் லாப ஈவும் 0.6 விழுக்காடு குறைந்துள்ளது. அதிலும் இவ்வாண்டு 3ஆம் காலாண்டில் பங்கு லாப ஈவு 24.84 சென்னாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3ஆம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட பங்கு லாப ஈவு 24.98 சென்னாகும்.
இது குறித்து பேசிய Carlsberg Malaysiaவின் நிர்வாக இயக்குநர் ஸ்டேபானோ கிளீனிங் பேசுகையில், பலவீனமான வாடிக்கையாளர்
சாராம்சங்கள் காரணமாக இவ்வாண்டு 3ஆம் காலாண்டில் விற்பனை ஈவு குறைந்துள்ளது. குறிப்பாக அனைத்துலக பொருளாதாரப் பின்னடைவு, உணவு விலை அதிகரிப்பு உள்ளிட்ட வாழ்வாதார செலவினச் சவால்களும் இதற்குக் காரணமாகலாம் எனவும் அவர் கூறினார்.
ஆனாலும் அண்மையில் Carlsberg குழுமம் தொடர்ந்து 4ஆவது முறையாக சிறந்த வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்புகள், பானங்கள் பிரிவு PRC விருதை வென்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.




















