கல்வி அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த 28 வயது இளைஞர் கைது

சமூக ஊடகப் பதிவுகள் மூலம் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக்கிற்கு எதிராக மிரட்டல் விடுத்த 28 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். கூட்டரசு பிரதேச குற்றப் புலனாய்வுத் தலைவர் ஷுஹைலி ஜெய்ன் கூறுகையில் அந்த நபர் நேற்று கோலாலம்பூரில் உள்ள ஸ்தாப்பாக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரே பிரச்சினை  தொடர்பில் நான்கு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன  என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். விசாரணையை பாதிக்கும் என்பதால், இந்த வழக்கை ஊகிக்க வேண்டாம் என்று ஷுஹைலி பொதுமக்களை வலியுறுத்தினார். அச்சுறுத்தல்களின் தன்மையையோ அல்லது அவை எதற்காக மேற்கொள்ளப்பட்டன என்றோ காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

எவ்வாறாயினும், பள்ளிகளில் பாலஸ்தீன ஒற்றுமை வாரத்தை நடத்துவதற்கான திட்டங்களின் காரணமாக ஃபத்லினா சமீபத்தில் செய்திகளில் இருந்தார். மேலும் சில பள்ளி மாணவர்கள் பேரணிகளில் போலி துப்பாக்கிகளை காட்டிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்தபோது விமர்சனங்களை எதிர்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here