பேராசிரியர் ராமசாமிக்கு ஆதரவு: 1,114,729.90 ரிங்கிட் நிதி திரட்டப்பட்டிருக்கிறது

சமயப் போதகர் ஜாகிர் நாயக்கை அவதூறாக பேசியதாக கூறப்படும் வழக்கு முன்னாள் பினாங்கு துணை முதல்வரும் பேராசிரியருமான ராமசாமி 1.52 மில்லியன் ரிங்கிட்டை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தொகையை செலுத்த ராமசாமி பொதுமக்களிடம் இருந்து நன்கொடை கோரியிருந்தார்.

திரட்டப்படும் நன்கொடை  இன்று நவம்பர் 6ஆம் தேதி இரவு  10.15  மணி நிலவரப்படி 1,114,727.90 ரிங்கிட் திரட்டப்பட்டிருக்கிறது. நன்கொடை வழங்க விரும்பும் நல்லுளங்கள் CIMB 800 895 3145 PERTUBUHAN MASYARAKAT TAMILAR KURAL MALAYSIA என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம். நீங்கள் செலுத்தும் நிதியின் விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் மலேசிய இந்தியர்களுக்காக என் குரல் என்றும் ஒலிக்கும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here