அனைவரும் பார்க்கமுடியும்; ஜப்பானுக்கு மலேசியாவில் LP.f 13ம் தர அனுமதி

கோலாலம்பூர்:

மலேசியாவின் MSK மற்றும் இந்தியாவின் MSK Film Production PVT. LTD இணைந்து ஜப்பான் திரைப்படத்தை தீபாவளி பொழுதுபோக்கு மக்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் வெளியிடவிருக்கின்றன.

ஜப்பான் படத்திற்கு மத்திய தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், ஜப்பான் படத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைத்து தரப்பினரும் பார்க்க முடியும் என்ற LP.f 13ம் தர (LP.f 13 classification) அனுமதியை மலேசிய திரைப்பட தணிக்கை குழு அனுமதி வழங்கியுள்ளது. 

நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கான நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக மையும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. 

கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங் களுமே கார்த்திக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.இதையடுத்து இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அவருக்கு மேலும் கைகொடுத்தது. இதனால் ஜப்பான் படமும் மாபெரும் வெற்றியைக் குவிக்கும் என்பது ரசிகர்கள் மேலும் திரைப்படக் குழுவினரின் கணிப்பாக இருக் கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here