கோலாலம்பூர்: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) நான்கு மாநிலங்களுக்கு தொடர் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது இன்று முதல் நவம்பர் 20 வரை நடைமுறையில் உள்ளது. தெரெங்கானு, கிளந்தான், பகாங் மற்றும் சபா ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டதாக மெட்மலேசியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெராங்கானு; கிளந்தானில் உள்ள தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மச்சாங், பாசீர் பூத்தே மற்றும் கோல க்ராய் மாவட்டங்கள்; பகாங்கில் ஜெரான்ட், மாரான், குவாந்தன், பெக்கான் மற்றும் ரொம்பின்; மற்றும் மேற்கு கடற்கரை (ரனாவ் மற்றும் கோத்தா பெலுட்), சண்டகன் (தெலுபிட், கினாபடங்கன், பெலூரன் மற்றும் சண்டகன்) மற்றும் சபாவில் குடாட் ஆகிய இடங்ளாகும். நவம்பர் முதல் மார்ச் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம்.