காணாமல் போன 14 வயது சிறுவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார்

கோலாலம்பூர்: நேற்று காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயது மாணவனைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களிடம் உதவியை நாடுகிறது. செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுதீன் கூறுகையில், மாணவர் முஹம்மது டேனியல் அக்மல் சுல்கைரி கடைசியாக வியாழன் நள்ளிரவு 12.30 மணியளவில் செராஸின் ஜாலான் யாக்கோப் லத்தீப்பில் உள்ள Sekolah Menengah Sains Alam Shah  ஆலம் ஷா மைதானத்தில் காணப்பட்டார்.

அதே நாளில் மதியம் 1.21 மணிக்கு மாணவர் காணாமல் போனதாக காவல்துறைக்கு புகார் கிடைத்தது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார். அல்லது  செராஸ் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-9284 505/5051 அல்லது கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2115 9999 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here