சாலையில் சாகசம் செய்த 6 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது

சிரம்பான், போர்ட்டிக்சன் மாவட்ட நிர்வாகக் கட்டடம் அருகே சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றதற்காகவும், ‘சூப்பர்மேன்’ போன்று ஸ்டண்ட் செய்ததற்காகவும் மூன்று மாணவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். 2024 புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற Op Samseng Jalananஇன் போது 17 முதல் 28 வயதுக்குட்பட்ட 6 ஓட்டுநர்கள்  தடுத்து வைக்கப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைவர் அய்டி ஷாம் முகமது தெரிவித்தார்.

குழுவின் செயல் தங்களுக்கும் மற்ற சாலைப் பயனாளர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம். விசாரணைக்காக போர்ட் டிக்சன் பொலிஸ் தலைமையகத்தில் ஆறு மோட்டார் சைக்கிள்களையும் நாங்கள் தடுத்து வைத்துள்ளோம் என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here