குவாந்தான்:
கேமரன் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து போ டீ எஸ்டேட்டை இரு திசைகளிலும் இணைக்கும் C156 ஜாலான் போஹ் சாலை தற்காலிகமாக மூடப்படுவதாக பொதுப்பணித் துறை (JKR) தெரிவித்துள்ளது.
பொதுப்பணித்துறையின் கேமரன் ஹைலேண்ட்ஸ் மாவட்டப்பிரிவு வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள ஒரு இடுகையின்படி, பிப்ரவரி 2 ஆம் தேதி வரை குறித்த சாலை மூடத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், ஆனாலும் இந்த சாலை பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
“பாதுகாப்பு மற்றும் பயனீட்டாளர்களின் வசதிக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சாலை மூடல் அவசியமானது என்று” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, சாலையில் செல்வோர், அந்தந்த இடத்தில் உள்ள சாலை அடையாளங்களைப் பின்பற்றவும், அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.