ஜனவரி 24 & 25 தேதிகளில் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பைக் கண்டு மகிழுங்கள்

பத்து மலை, ஜார்ஜ்டவுன், ஈப்போ மற்றும் சுங்கை பெட்டானி ஆகியவற்றிலுள்ள ஆலயங்களில் இருந்து நேரலை ஒளிபரப்பு


கோலாலம்பூர், ஜனவரி 19, 2024 தைப்பூசத்தின் 24 மணிநேர நேரலை ஒளிபரப்பை ஜனவரி 24, இரவு 9 மணி முதல்ஜனவரி 25, இரவு 9 மணி வரை ஆஸ்ட்ரோ வானவில்(அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும்ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். இந்த முதல் 24 மணிநேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு, பத்து மலை, ஜார்ஜ்டவுன், ஈப்போ மற்றும் சுங்கை பெட்டானி ஆகியவற்றிலுள்ளப் புகழ்பெற்ற உள்ளூர் ஆலயங்களின்நேரலை அறிவிப்புகளைப் பகிர்ந்துக் கொள்ளும் 19தொகுப்பாளர்கள் வரிசையை உள்ளடக்கிய முதல் தொடர்ச்சியானத் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பாகும். மேலும், அனைத்து மலேசியர்களும் ராகாவில் பக்திப் பாடல்களைக் கேட்டு இரசிக்கலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத்துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “எங்களின் வருடாந்திரச் சிறப்பு நிகழ்ச்சிகளின்அணிவகுப்பில் தைப்பூச நேரலை ஒளிபரப்பு எப்போதும்முக்கியமான ஒன்றாகும். ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை201)இல் இடம்பெறும் இந்த ஆண்டின் 24 மணி நேரநேரலை ஒளிபரப்பு, தொலைக்காட்சியில் எங்களின்தைப்பூச நேரலை ஒளிபரப்பின் 12-வது ஆண்டை(மாமாங்கம்) குறிக்கிறது. முதல் முறையாகக் தொலைக்காட்சியில் இடம்பெறும் 24 மணி நேரத் தைப்பூசநேரலை ஒளிபரப்பு, மொத்தம் 19 தொகுப்பாளர்களுடன், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் வசதியாகஇருந்துக் கொண்டேப் பல்வேறுக் கோயில்களிலிருந்துஉடனுக்குடனானப் பல நிலவரங்களையும் காட்சிகளையும்கண்டு மகி வழிவகுப்பதால் இது அவர்களின் அனுபவத்தைஇன்னும் குறிப்பிடத்தக்கத்தாக்குகிறது.

#நன்றிகந்த கருப்பொருளுக்கு ஏற்பப், பேராசிரியர் டாக்டர் ஜெயபாலன்வள்ளியப்பன், டாக்டர் என்.தர்மலிங்கம் நடராஜன், வரதராஜுலோகநாதன் மற்றும் சில்லாலி எஸ்.கந்தசாமி ஆகியோரும்சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொண்டு இவ்விழாப்பற்றிய நுண்ணறிவுத் தகவல்களைப் பார்வையாளர்களுக்குவழங்குவார்கள். எங்கள் வாடிக்கையாளர்களின்தொடர்ச்சியான ஆதரவிற்காக எங்களின் மணமார்ந்தநன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடுத் தைப்பூசத்தைக்கொண்டாடுபவர்களுக்கு நாங்கள் வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்கிறோம்”.

பின்வரும் ஆலயங்கள் உட்ப்பட உள்ளூர் ஆலயங்களில்இருந்து நேரலை ஒளிபரப்பைச் சோதிராஜன் பரஞ்சோதி, மீனாகுமாரி கடியப்பன், சுஷ்மிதா முருகன், கண்ணாசிம்மத்திரி, கோமதி வேலுபிள்ளை, உதயா, ரேவதிபாவதாஸ், மகேன், அருணா ராஜ் தேவராஜு, இந்துமதிசுபர்மணியம், சுரேஸ் திரு சம்பந்தன், மகேந்திரன்வேலுபிள்ளை, ஸ்ரீ குமரன் முனுசாமி, ரேவதி மாரியப்பன், குணசீலன் சிவக்குமார், கபில் கணேசன், சிவராஜ், விக்கிமற்றும்அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2023′ வெற்றியாளர் விக்னாமுத்துசாமி ஆகியோர் தொகுத்து வழங்குவர்:

o பத்து மலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தானம் (கோம்பாக், சிலாங்கூர்)
o அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் (ஜார்ஜ்டவுன், பினாங்கு)
o கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம்(ஈப்போ, பேராக்)
o ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் புன்தோங் (ஈப்போ, பேராக்)
o ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் ஆலயம் (சுங்கை பெட்டானி, கெடா)

அதுமட்டுமின்றி, தைப்பூசம் மற்றும்பூச நட்சத்திரத்தின்முக்கியத்துவம், ‘ஆறுபடை வீடுகோயில்கள்மற்றும்முருகப்பெருமானின் வரலாறு, அபிஷேகத்தின் நோக்கம்மற்றும் நன்மைகள் மற்றும் பல தலைப்புகளைப் பற்றியத்தகவல்களை விருந்தினர் பேச்சாளர்கள் வழங்குவதைக்கண்டு மகிழ்வதோடு ​​உலகெங்கிலும் உள்ளக் கோவில்களில்இருந்து தைப்பூச ஒளிபரப்பையும் வாடிக்கையாளர்கள்கண்டு இரசிக்கலாம். வானொலி முண்ணனியில், மலேசியர்கள் 24 மணி நேரப் பக்திப் பாடல்களை ராகா வாயிலாக வானொலி அல்லது SYOK செயலி வழியாகக் கேட்டு மகிழலாம்.

மேல் விபரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

ஊடகத் தொடர்பு:

திவியா மாணிக்கம் | அசோசியேட், தகவல் தொடர்பு, ஆஸ்ட்ரோ | 012-5292130 | [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here