1990 களில் Spanco Sdn Bhd உடன் கையொப்பமிடப்பட்ட அரசாங்க ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (MACC) அழைக்கப்பட்டவர்களில் ஒரு முன்னாள் பிரதமரும் அடங்குவார்.
MACC தலைமை ஆணையர் அஸாம் பாக்கி கூறுகையில், அரசாங்கத்தின் வாகனங்களின் கொள்முதல் மற்றும் நிர்வாகத்தை கையாளுவதற்கான ஒப்பந்தத்தை வழங்க முடிவு செய்வதில் “சம்பந்தப்பட்ட அனைவருக்கும்” சம்மன் அனுப்பப்படும். இதில் அப்போதைய பிரதமரும், நிதியமைச்சரும் அடங்குவர் என்றார்.








