இன்று பிற்பகல் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர்:

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் நீண்ட விடுமுறையையொட்டி அதிகரித்துள்ள பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக, இன்று மாலை 5 மணி நிலவரப்படி பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலாகக் காணப்படுகிறது.

டமான் கிரீன்வுட் மற்றும் பத்து மலையிலிருந்து கோம்பாக் டோல் பிளாசாவை நோக்கி செல்லும் டுத்தா -உலு கிள்ளான் விரைவுச்சாலையில் (Duke) சுமார் ஐந்து கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனங்கள் மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து தெற்கு ரவாங் வரை வடக்கு நோக்கியும், புக்கிட் பெருந்துங்கிலிருந்து புக்கிட் தாகருக்கும், சுங்காய் முதல் பீடோர் வரை, தாப்பாவிலிருந்து கோபேங் வரையிலும், பண்டார் பாருவிலிருந்து பண்டார் காசியா வரையிலும் போக்குவரத்து மெதுவாக நகர்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே (LPT) 1 மற்றும் LPT 2 ஆகிய இரு திசைகளிலும் லெந்தாங் முதல் பெந்தோங் வரை கிழக்கு நோக்கிச் செல்லும் பகுதிகளைத் தவிர, ஏனைய சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here