தீயில் அழிந்த பள்ளி வளாகம்

 கினபத்தாங்கான் பள்ளியில் திங்கள்கிழமை (மார்ச் 4) ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு அறைகள் கொண்ட தொகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. எனினும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தெரிவித்தனர்.

Sekolah Kebangsaan Suan Lamba கைவிடப்பட்ட தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து திணைக்களத்திற்கு மாலை 5.10 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. கினபத்தாங்கான்  தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு அனுப்பப்பட்டது.

தீயினால் அந்தத் தொகுதி முழுவதுமாக அழிக்கப்பட்டது. மாலை 6.10 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 6.47 மணிக்கு நடவடிக்கை முடிவுக்கு வந்தது என்று திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here