பூமிபுத்ரா,
சீனக் குடும்பங்களைக் காட்டிலும் இந்தியக் குடும்பங்கள் பொருளாதார ஏணியில் அவ்வளவு எளிதாக முன்னேறவில்லை என கஸானா ஆய்வு மையத்தின் ஆய்வு கூறுகின்றது.
சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால், பல காலமாக இந்தியக் குடும்பங்கள் அதே நிலையிலான பொருளாதாரச் சூழலில்தான் சிக்கிக் கொண்டுள்ளனர் எனலாம்.
இந்த நிலையை மாற்றுவதற்கு ஒரு வழி உயர்கல்வி யாகும். இளங்கலை, முதுகலை அல்லது டிப்ளோமா கல்வித் திட்டங்களைப் பயில்வதன் மூலம் முன்னேற்ற வாய்ப்பு களுக்கான கதவுகளைத் திறக்கும் வல்லமையைக் கொண்டவையாகும்.
அதிலும் முறையான கல்வித் தகுதி இல்லையென்றால், மற்றவர்கள் தங்கள் பணி பயணத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டுவரும் நிலையில் நீங்கள் குறைந்த சம்பளத்தைப் பெறும் அல்லது முன்னேற்றம் இல்லாத வேலைகளிலேயே தொடர்ந்து இருக்க நேரிடும்.
அதிலும் கல்வித் தகுதி அடிப்படையில் மிகப் பெரிய அளவில் சம்பள இடைவெளி இருப்பதாக 2022 தொழிலாளர் ஆய்வறிக்கை கூறுகின்றது. குறிப்பாக இடைநிலைக்கல்வி பயின்றவர்களுடன் ஒப்பிடுகையில் டிப்ளோமா கல்வி பயின்றவர்கள் 17 விழுக்காடு அதிகமாக சம்பளம் பெறுகின்றனர்.
அதேபோல் டிப்ளோமா கல்வி பயின்றவர்களைக் காட்டிலும் இளங்கலை பட்டக் கல்வி பயின்றவர்கள் 24 விழுக்காடு அதிகமாக சம்பளம் பெறுகின்றனர். தொடர்ந்து இளங்கலைப் பட்டக் கல்வி பயின்றவர் களுடன் ஒப்பிடும்போது முதுகலைக் கல்வி பயின்றவர்கள் 29 விழுக்காடு கூடுதலாக சம்பளம் பெறும் நிலையில், முதுகலைக் கல்வி பயின்றவர்களைவிட முனைவர் (பிஎச்டி) கல்வி பயின்றவர்கள் 23 விழுக்காடு அதிகமாக சம்பளம் வாங்குகின்றனர்.எனவே, நீங்கள் பல்கலைக்கழகம் சென்று பயின்றால் இன்னும் அதிகமாகவே சாதிக்கலாம்.
இந்நிலையில் இளங்கலைக் கல்வி பயில்வது பார்ப்பதற்கு மிகக் கடினமாகத் தெரியலாம். அதிலும் குறிப்பாக நேரப் பற்றாக்குறை இதில் மிகப் பெரிய சவாலாக உள்ளது. உங்களில் பலர் முழு நேரப் பணியில் அமர்ந்து குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கலாம். இதுபோன்ற சூழலை எதிர்நோக்குபவர்களுக்கு உதவ ஓயுஎம் எனும் மலேசிய பொதுப் பல்கலைக்கழகம் உள்ளது.
இந்த டிஜிட்டல் மய பல்கலைக்கழகம் அனைத்து பாடத்திட்டங்களையும் ஆன்லைன் மூலம் வழங்குகின்றது. இதன் மூலம் பல்கலைக்கழக வளாகம், வகுப்பறைக்கு நேரடியாகச் செல்லாமலேயே மாணவர்கள் கற்றல் நடவடிக்கை, பாடங்கள், தேர்வு அனைத்தையும் எதிர்நோக்க முடியும்.அதிலும் போக்குவரத்து, புத்தகங்கள் போன்ற அம்சங்களிலும் மாணவர்கள் சிக்கனத்தைக் கடப்பிடிக்க முனைந்தால் அவற்றுக்கும் சிறந்த தேர்வாக ஓயுஎம் பல்கலைக்கழகம் அமைகின்றது.
கற்றல் நடவடிக்கைக்குத் தேவையான குறிப்புகள் அனைத்தும் ஆன்லைனில் உள்ளன. அதேபோல் டிஜிட்டல் நூலகத்திற்கும் 24 மணி நேர அனுமதி உள்ளது. மேலும், மாணவர் பதிவின்போது ஓயுஎம் பல்கலைக்கழகம் பல சிறப்புக் கழிவுகளையும் தள்ளுபடிகளையும் வழங்கு கின்றது. உதாரணத்திற்கு, தற்போது ஒவ்வொரு தவணை யிலும் 300 ரிங்கிட் தள்ளுபடியும் 5 விழுக்காடு சிறப்புக் கழிவும் வழங்கப்படுகின்றது.
ஓயுஎம் பல்கலைக்கழகத்தில் வர்த்தக மேலாண்மை, தொழில்நுட்பம் – பயன்பாட்டு அறிவியல், சமூக அறிவியல் மனிதநேயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் 55 பாடத்திட்டங்கள் போதிக்கப்படுகின்றன. இந்தப் பாடத் திட்டங்கள் அனைத்தும் எம்கியுஏ எனப்படும் மலேசிய தர மதிப்பீடு, பொது சேவைத்துறை அங்கீகாரங்களைப் பெற்றவையாகும். அதிலும் சில பாடத்திட்டங்கள் நிபுணத்துவ அமைப்புகளின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன.
இது தவிர கற்றல் நடவடிக்கைகள் பாடத் திட்டம் – தொழில்துறை என இரு அம்சங்களின் அடிப்படையில் இருக்கும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கு உதவக்கூடிய நிஜ பணி அனுபவத்தையும் பெறலாம். இதனிடையே உங்கள் படிப்பு முழுவதும் ஆன்லைனில் இருந்தா லும் ஓயுஎம் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தது முதல் பட்டம்’ பெறும் வரையில் உங்களுக்கு நாடு தழுவிய அளவில் உள்ள இதன் 35 கல்வி மையங்களி லிருந்து ஆதரவும் வழிகாட்டு தலும் இருக்கும்.
2000ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கிய ஓயுஎம் பல்கலைக் கழகம் தற்போது 30,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது. அதிலும் இதுவரை 100,000 பட்டதாரி களையும் இப்பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
அதில் பொதுச்சேவை- தனியார் தொழிலாளர்கள், தொழில்முனைவோர், பிரபலங்கள், விளையாட்டாளர்கள் மட்டுமன்றி சிறைக் கைதிகள் என அனைத்து நிலையிலானவர்களும் அடங்குவர். தற்போது இப்பல்கலைக்கழகத்தின் மே மாத மாணவர் பதிவு திறக்கப்பட்டுள்ளது. மேல் விவரங்களுக்கு.
www.cum.edu.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம். அதுமட்டுமன்றி 03-78012000 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதோடு [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சலும் அனுப்பலாம்.










