அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு சற்று வீழ்ச்சி

கோலாலம்பூர்:

அமெரிக்க பெடரல் ரிசர்வ் (FED) அதன் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்ததை அடுத்து, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.

காலை 9 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 4.7705/7775 ஆக இருந்தது, இந்த மதிப்பு கிரீன்பேக்கிற்கு எதிராக நேற்று 4.7700/7750 ஆக இருந்தது என்று பேங்க் முகமலட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமட் அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறினார்.

மத்திய வங்கியின் இரண்டு நாள் பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) கூட்டம் நேற்று புதன்கிழமை முடிவடைந்தது, இதன்போது அமெரிக்க மத்திய வங்கி அதன் இரண்டு சதவீதத்தை அடைவதில் முன்னேற்றம் இல்லாததால் 5.50 சதவீத வட்டி விகிதத்தை நிலையானதாக கொண்டிருந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here