கோலாலம்பூர் – மே 17 அன்று இஸ்தானா நெகாராவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற இரு சந்தேக நபர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இருவர் மீதும் தண்டனைச் சட்டம் பிரிவு 447 மற்றும் பிரிவு 511 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா திங்கள்கிழமை (மே 20) கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மீது வெடிக்கும் பொருட்கள் மற்றும் தாக்குதல் ஆயுதங்கள் சட்டத்தின் 6(1) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சந்தேக நபர் அந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் ஏன் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.