65000 காபி கப்கள்.. ஏற்கனவே நொந்து போயிருக்காரு எலான் மஸ்க்.. இப்ப இது வேறயா?

பெர்லின்: திடீரென ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது எலான் மஸ்க்கின் டெஸ்லா கம்பெனி.. என்ன நடந்தது? எப்படி நடந்தது?. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார்… அதாவது, பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், மற்றும் எலான் மஸ்க் இவர்கள் 2 பேருமே உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம் பிடித்து வருபவர்கள்.

நிறுவனங்கள்: அந்தவகையில், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், எக்ஸ் தளம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. அதிலும் ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நாளிலிருந்தே, தினந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவரது பெயர் மீடியாவில் பரபரப்பான செய்திகளாகி வருகின்றன. இப்போதுகூட 2 விதமான செய்திகள் வட்டமடித்து வருகின்றன.

அலுவலக பொருட்கள்: அதாவது ட்விட்டர் அலுவலக பொருட்களை எல்லாம் எலான் மஸ்க் ஏலம் விடப்போகிறாராம். ட்விட்டர் பறவை, ஒரு ப்ரொஜெக்டர், ஐமேக் டிஸ்பிளே, காபி இயந்திரங்கள், நாற்காலிகள், ஃபிரிட்ஜ், பிட்சா மேக்கர் இப்படி கிச்சன் பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த ஏலம் வரும் ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும், இந்த ஏலத்தை முன்னணி ஏல விற்பனை நிறுவனம் ஒன்று மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. 25 முதல் 50 டாலர்கள் விலையில் இருந்து ஏலம் தொடங்குமாம்.

கிளவுட் சேவை: சுமார் 1 பில்லியன் டாலர்கள் அளவுக்கான செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவன குழுவினரிடம் சொல்லியிருக்கிறாராம்.. அவர்களும் நிறுவனத்தின் கிளவுட் சேவை தொடங்கி செலவுகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அதனால்தான், இப்படியொரு ஏலம் விற்பனை நடத்தப்போகிறார்களாம்.

ஏற்கனவே, ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில், 10% பணியாளர்களை குறைக்கும் திட்டத்தை எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதைக்கேட்டதிலிருந்தே டெஸ்லா நிறுவனத்தின் ஜெர்மன் ஊழியர்களை கவலையில் உள்ளார்களாம். ஏற்கனவே பணிப்பாதுகாப்பு, குறைவான ஊதியம் போன்ற பிரச்சனைகளை ஊழியர்கள் எதிர்கொண்டு வரும்நிலையில், பணியாளர்களை குறைக்கும் திட்டத்தையும் எலான் மஸ்க் கையில் எடுக்க போவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here