கோலாலம்பூர்: சில வாடிக்கையாளர்கள் சட்டத்தை புறக்கணிப்பதால், உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை அமல்படுத்துவது பல உணவக உரிமையாளர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது என்று ஒரு முக்கிய உணவக உரிமையாளர் கூறினார். எனது கடை ஒன்றில் (கோலாலம்பூரில்), வெளிநாட்டு மாணவர்கள் குழு புகைப்பிடிப்பதாக சில வாடிக்கையாளர்கள் எனது ஊழியர்களிடம் புகார் செய்தனர். ஆனால் அவர்கள் (புகைபிடிப்பவர்களிடம்) தெரிவித்தால் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று டத்தோ ஜவஹர் அலி தாயிப் கூறினார்.
3,500 உணவக ஆபரேட்டர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜவஹர், சிகரெட் புகை சூழ்ந்திருக்கும் வளாகங்களில் தங்கள் குழ்ந்தைகளுடன் உணவருந்துவதை குடும்பங்கள் விரும்புவதில்லை என்றார். இது நாங்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சனை என்று அவர் கூறினார்.
சில வாடிக்கையாளர்கள் புகைபிடிக்க கூடாது என்று அறிவுறுத்துனால் அதனை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் பலர் அதற்கு செவி சாய்பதில்லை. அதைவிட முக்கியமானது சட்டத்திற்கு இணங்குவதுதான் என்றார். சட்ட காரணங்களுக்காக மட்டுமல்லாமல், பொது சுகாதாரத்திற்கு மரியாதை செலுத்தும் விஷயமாகவும் அனைவரும் இணங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
உணவக உரிமையாளர்களை விட புகைப்பிடிப்பவர்களை இலக்காகக் கொண்ட மிகவும் பயனுள்ள அமலாக்கத்திற்கு ஜவஹர் அழைப்பு விடுத்தார். ஏனெனில் அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு “அறிவுரை” மட்டுமே வழங்க முடியும். நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (இணக்கத்தை அமல்படுத்த), வாடிக்கையாளர்களை வளாகத்திற்குள் புகைபிடிக்க முடியாது என்று மட்டுமே நாங்கள் அறிவுறுத்த முடியும் என்று அவர் கூறினார்.
மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். புத்ராஜெயாவில், அதிகாரிகள் அடிக்கடி வருகிறார்கள். நான் அவர்களை ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது பார்க்க முடியும். ஆனால் மற்ற பகுதிகளில் அடிக்கடி இல்லை என்று அவர் கூறினார்.















