புதுக்கோட்டை:
பாத யாத்திரை சென்றவர்கள் மீது சிறிய ரக லாரி மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
இவர்கள் சமயபுரம் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கண்ணுக்குடிபட்டியைச் சேர்ந்த பக்தர்கள் ஒரு குழுவாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த சிறிய லாரி ஒன்று தீடீர் என கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியது.
தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்து அங்கேயே துடிதுடித்து உயிர் இழந்த நிலையில் இரு பெண்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலன் இன்றி லட்சுமி என்ற பெண் மாண்டார். பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்த நிலையில் தமிழக காவல் துறை விசாரணை நடந்து வருகிறது.