கோலாலம்பூர்:
மலேசியா-ஈரான் ஆகிய இரு நாடுகளின் ஒற்றுமை பரஸ்பர நலன் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் இதனால் இதர வெளிநாடுகளுடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் மசூத் பெசெஷ்கியானுடன் நேற்று நடந்த தொலைபேசி உரையாடலின் போது இந்த செய்தியை தெரிவித்ததாக அன்வார் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் கூறினார்.
மலேசியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்த இரு நாடுகளின் தற்போதைய அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் ஆராய்வதாக எங்கள் கலந்துரையாடல் இருந்தது,” என்று அவர் கூறினார்.
ஜூலை 30 அன்று ஈரானின் புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் பெஜேஷ்கியானுக்கு அன்வார் வாழ்த்துகளை தெரிவித்தார், அதேநேரத்தில் ஈரான் தனது தலைமையின் கீழ் தொடர்ந்து முன்னேறுவதற்கான நம்பிக்கையை பெஜேஷ்கியான் வெளிப்படுத்தினார்.
கடந்த மே 19 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஈரான் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் சமீபத்திய மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்த அன்வார், பாலஸ்தீன மக்களுக்கான நீதிக்கான ஈரானின் அசைக்க முடியாத ஆதரவையும், இஸ்ரேலில் சியோனிச ஆட்சி செய்த அநீதிகள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான அதன் எதிர்ப்பையும் நான் பாராட்டுகிறேன்,” என்று கூறினார்.
அவர்களின் உரையாடலின் முடிவில், பிரதமர் பெசேஷ்கியானை மலேசியாவிற்கு விரைவில் வருமாறு அழைப்பு விடுத்தார் என்றும் அவர் சொன்னார்.