கடந்த சில நாட்களாகவே தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர் ராஜ் தருண் மற்றும் அவரது முன்னாள் காதலியான லாவண்யா சவுத்ரிக்குமான காதல் போராட்டம் தான் பரபரப்பான செய்தியாக இடம் பெற்று வருகிறது.
ராஜ் தருண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து ஏமாற்றிவிட்டு, தற்போது அவருடன் நடித்து வரும் மால்வி மல்கோத்ரா என்பவருடன் நெருக்கம் காட்டி வருகிறார் என குற்றம் சாட்டி காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார் லாவண்யா சவுத்ரி.
இது குறித்து ராஜ் தருண் மீது எப்ஐஆரும் போடப்பட்டுள்ளது. ஆனால் ராஜ் தருண் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் நீதிமன்றம் மூலம் நான் நிரபராதி என நிரூபிப்பேன் என்றும் கூறி வருகிறார்.
ராஜ் தருண் தற்போது நடித்து வெளியாகி உள்ள தனது திகரபதர சுவாமி என்கிற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட போது அங்கே ஆவேசமாக உள்ளே நுழைய முயற்சித்த லாவண்யா சவுத்ரி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த நிலையில் இதே போன்று சமீபத்தில் ஒரு டிவி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் லாவண்யா சவுத்ரி கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வில் நடிகர் ராஜ் தருணின் நண்பரான பாஷா என்பவரும் கலந்து கொண்டார்.
பொதுவாகவே பாஷா சமீப காலமாக பல விவாதங்களில் பேசும்போது தன் நண்பர் ராஜ் தருண் மீது எந்த தவறும் இல்லை என்பது போன்றும் லாவண்யா மீது தான் தவறு இருக்கிறது போன்று பேசி தனது நண்பருக்காக வக்காலத்து வாங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியிலும் அதுபோலவே அவர் பேச துவங்க இதனால் கோபமான லாவண்யா சவுத்ரி, தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி பாஷா மீது வீசியுள்ளார். இதை எடுத்து ஆவேசமான பாஷா லாவண்யாவை குற்றம் சாட்டியதுடன் மிரட்டல் விடும் தொனியிலும் எச்சரித்துள்ளார். இந்த நிகழ்வு தற்போது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.