ஆடிப்பூரம் :வழிபட வேண்டிய நேரமும், செய்ய வேண்டிய பூஜையும்

திருமணம், குழந்தை வரம் மட்டுமின்றி குடும்ப நலனுக்காகவும் பக்தர்கள் ஆடிப்பூர தினத்தில் வேண்டிக் கொண்டு வழிபடுகிறார்கள். இது ஆண்டாள் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று அம்மனை எந்த முறையில் வீட்டிற்கு அழைத்து, பூஜை செய்ய வேண்டும், எந்த முறையில் பூஜை செய்தால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.ஆடி மாதத்தில் வரக் கூடிய மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடிப்பூரம்.

ஆடிப்பூர சிறப்புகள் :

ஆடிப்பூர சிறப்புகள் :

இது அன்னை உமாதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாளாகும். இந்த நாளில் அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும், நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரமும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து பக்தர்கள் வழிபடும் வழக்கம் உள்ளது. சில கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு திருவிழாவும் ஆடிப்பூரத்தன்று நடத்தப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 07ம் தேதி பதன்கிழமை வருகிறது.

வீட்டில் ஆடிப்பூர வழிபாடு :

* ஆடிப்பூரம் அன்று அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து, நம்முடைய வேண்டுதலை சொல்லி வழிபடலாம். திருமணம், குழந்தை வரம் வேண்டுபவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபடுவதால் அம்பிகையின் அருள் கிடைக்கும்.

* வீட்டில் ஒரு மனைப்பலகையை கிழக்கு-மேற்காக போட்டு, அதன் மீது மாக்கோலம் போட்டு, சிவப்பு நிறத்துணி இருந்தால் விரித்துக் கொள்ளலாம். சிவப்பு துணி இல்லை என்றால் மாக்கோலமிட்டு அப்படியே வைத்து விடலாம்.

* அந்த மனைப்பலகையில் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மனின் படத்தை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, பூப்போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

* அம்மன் படத்திற்கு முன் வளைகாப்பிற்கு சீர் வைப்பது போல் சந்தனம், குங்குமம், வளையல், அக்ஷதை, பூ ஆகியவற்றை தனித்தனி தட்டுக்களில் பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.

* வளையல்களால் அம்மனுக்கு மாலை போட்டு கட்டி போடலாம்.

* பிறகு அம்மனுக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் சொல்லி, அம்மனை அந்த மனையில் எழுந்தருள செய்ய வேண்டும். எதுவும் தெரியாதவர்கள் அபிராமி அந்தாதி படிக்கலாம்.

* பிறகு அக்ஷதை, பூ ஆகியவற்றை அம்மனின் காலடியில் சம்பித்து வழிபட வேண்டும்.

* அம்மனுக்கு ஆரத்தி கரைத்து திருஷ்டி கழிக்க வேண்டும்.

* அந்த அம்மனின் படத்தை எடுத்து, பூஜை அறையில் எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம்.

* அந்த மனைப்பலகையை வீட்டின் கூடத்திற்கு எடுத்து வந்து யாருக்கு திருணம் ஆக வேண்டுமோ அல்லது யாருக்கு குழந்தை வேண்டுமோ அவர்களை அமர வைத்து, அம்மனுக்கு செய்தது போல் நழுங்கு வைத்து, ஆரத்தி காட்ட வேண்டும்.

* அக்ஷதை, பூக்கள் தூவி அவர்களை வாழ்த்திய பிறகு அந்த பெண்ணின் கைகளில் வளையல்கள் மாட்டி விட வேண்டும். அம்மன் அமர்ந்த இடத்தில் நாமும் அமர்ந்து இந்த சடங்குகளை செய்வதால் நம்முடைய வேண்டுதல் நிறைவேற நிச்சயம் அம்மன் அருள் செய்வாள்.

* பிறகு அப்படியே எழுந்து சென்று பூஜை அறையில் அம்மனிடம் வேண்டிக் கொண்டு, அம்மனின் முன்பு விழுந்து வணங்க வேண்டும்.

* தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, குழந்தை வரம் வேண்டும் பெண்ணின் முந்தானையில் நிரப்பி, பூஜை அறையில் சென்றும் வழிபடலாம்.

* இந்த தேங்காயை அடுத்த நாள் ஏதாவது இனிப்பு செய்து சாப்பிடலாம். காரமான உணவுகள் சமைப்பதற்கும், வழக்கமான உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தக் கூடாது.

குழந்தை வரம் வேண்டும் பெண்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, அங்கு குளிப்பதற்கு வசதி இருந்தால் குளித்து விட்டு, ஈரப்புடவையுடன் சென்று, அங்குள்ள மரத்தை சுற்றி வர வேண்டும். பிறகு நீங்கள் அணிந்திருக்கும் புடவையின் முந்தானையில் இருந்து சிறிதளவு கிழித்து, அதில் ஒரு கல் அல்லது மஞ்சள் கிழங்கு வைத்து, அம்மனை நினைத்து அந்த மரத்தில் கட்டி விட்டு வரலாம். கோவிலில் குளிக்க வசதி இல்லை என்பவர்கள் வீட்டிலேயே குளித்து விட்டு புடவை முந்தானையில் இருந்து சிறு பகுதியை எடுத்துச் சென்று இந்த வழிபாட்டினை செய்யலாம். எதுவும் முடியாதவர்கள் கோவிலில் விற்கும் தொட்டிலை வாங்கி, அம்மனிடம் வைத்து பூஜை செய்து விட்டு, பிறகு கோவில் மரத்தில் கட்டி விட்டு வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here