தஞ்சோங் மாலிமில் கீலி பெருந்திட்டம்

சீனாவின் கீலி வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பெருந்திட்டத்தை தஞ்சோங் மாலிமிற்கு கொண்டு வருவதற்கு பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முஹமட் முயற்சித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 32 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இந்த பெருந்திட்டத்திற்கு வரும் செப்டம்பர் மாதம் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தஞ்சோங் மாலிம் ஆட்டோமோட்டிவ் ஹை தெக் பெரு வெளியில் பிரதான முதலீட்டு நிறுவனமாக கீலி எனப்படும் ஸெஜியாங் கீலி ஹோல்டிங்ஸ் குருப் கம்பெனி லிமிடெட் இருக்கும்.

இதற்கான பெருந்திட்டத்தை அந்நிறுவனம் பேராக் மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.

டி ஆர் பி DRP நிறுவனத்துடன் இணைந்து தஞ்சோங் மாலிமை மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு முனையமாக உருமாற்றம் செய்வதற்கு கீலி திட்ட மிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here