ஓடும் ரயிலில் படிக்கட்டில் சாய்ந்து நின்றுகொண்டு வீடியோ செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை மரணத்தின் பிடியில் இருந்து நூலிலையில் தப்பிய ஓர் இளம் பெண் மிகப் பெரிய பாடம் கற்றுகொண்டிருப்பார்.
வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அந்த மலேசியப் பெண் திடீரென கால் வழுக்கி தலை இரும்பு கம்பத்தில் பலமாக மோதியது. நிலை தடுமாறி வெளியில் விழவிருந்த அப்பெண் கதவில் இருந்த பக்கவாட்டு இரும்பு பிடியை கெட்டியாக பிடித்துக்கொண்டு உள்ளே வந்தார்.
ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம் பெண்ணுக்கு நெற்றிப் பொட்டிலும் தலையிலும் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றார்.