இப்படி எல்லாம் சாப்பிட்டால் வாழ்க்கையில் பிரச்னை அதிகரிக்குமாம் !

சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவக் கூடாது

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் அடிப்படைத் தேவை உணவு. மனிதன் அந்த உணவை கடவுளாக பார்க்கிறான். ஹிந்து மதத்தில் அன்னபூரணியாக வணங்குகிறோம். இதன் காரணமாக வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் சாப்பிட்ட தட்டு அல்லது கிண்ணத்திலேயே கை கழுவுவது தவறு. இதனால் உங்கள் வீட்டில் செல்வ நிலை பாதிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்.

படுக்கை மீது அமர்ந்து சாப்பிடக்கூடாது

நம்முடைய படுக்கை செவ்வாய் அம்சமாகும். சாப்பிடும் இடம்  சனியின் அம்சமாகும். நாம் படுக்கை மீது அமர்ந்து சாப்பிடும் போது சனி+ செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. இதனால் நாம் கடன் தொல்லையைச் சந்திக்க நேரிடும். மேலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற தன்மை ஏற்படும்.
இதன் காரணமாக வாழ்க்கையில் எதிர்மறையான பிரச்சனைகளும், மன வருத்தங்களும் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்திக் கொள்வதை விட , சாப்பிடும் இடத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடுவது நன்மை தரும்.

உணவை எப்படி பரிமாறுவது?

வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் சாப்பிட அமரும் போது, உணவு பரிமாறும் விஷயத்தில் சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை ஒரே நேரத்தில் பரிமாறக்கூடாது. சிலர் சப்பாத்தி, சாதம், பொங்கல் என ஒரே நேரத்தில் பரிமாறுவார்கள். இது மிகவும் தவறு.

ஒருவருக்கு வேண்டிய உணவை தேர்வு செய்து சாப்பிட்ட பின்னர், அவருக்கு தேவையான மற்றொரு உணவை பரிமாறுவது நல்லது இதன் மூலம் உணவு வீணாவதைத் தவிர்க்கப்படுவதோடு, நாம் தேவையான அளவு சாப்பிட முடியும். பல விசேஷங்களில் இப்படி ஒரே நேரத்தில் பலவித உணவுகளைப் பரிமாறப்படுவதால் அதிக அளவில் வீணடிக்கப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.

நாம் சாப்பிடும் தட்டு,எப்படி இருக்க வேண்டும்?

நாம் சாப்பிட உட்கார முன், நாம் சாப்பிட பயன்படுத்தக்கூடிய தட்டு, கிண்ணங்கள் துளி தண்ணீர் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. சிலர் நேராக பாத்திரங்களை கழுவி உணவு பரிமாற பயன்படுத்துவது வழக்கம். அப்படி செய்வதால் வாழ்க்கையில் பல கடினமான சூழ்நிலைகளை எதிர்க்கலாம் நேரிடும். சாப்பிட உட்காருவதற்கு முன்னர், பயன்படுத்த உள்ள பாத்திரங்களை சுத்தமாக கழுவப்பட்டுள்ளதா? என்பதை பார்ப்பதோடு, சுத்தமான துணியால் துடைத்த பின்னரே உணவு பரிமாறுவது நல்லது.

உணவை வீணாக்குதல் தவறு

ஒரு பொழுதும் சாப்பாட்டை வீணாக்குவது மிகவும் தவறு என்பதை உணர்ந்து செயல்படவும். தல தம்மால் சாப்பிட இயலக்கூடிய அளவை விட அதிகமாக தட்டில் வைத்து சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுபவர்கள் உண்டு.

மாதத்தில் ஒரு நாளாவது இருவேளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதேபோல மாதத்தில் ஒரு நாளாவது ஏழை, எளிய மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் ஒருவேளை உணவாவது வாங்கித் தருவது அவசியம்.

வீட்டில் உள்ள தண்ணீர் குழாய் சரியாக மூடுவதை உறுதி செய்யவும். தண்ணீர் சொட்டு சொட்டாக சுட்டுவதால் வீட்டில் பிரச்சனைகள் தான் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here